தாளம் -ஆதி
எடுப்பு
அழகுத் தாமரை ஆடுகிறாள்- வண்டுஆனந்தமாய் இசை பாடுது பார்! (அழகு
தொடுப்பு
அழைக்கும் கரம் குவிந்ததென-மொட்டுஅசைந்து அசைந்து நிற்பதைப் பார்! ( அழகு
அமைதி
தூயதென்றல் சுருதி சேர்க்க-அலைதோம் தோமென்று தாளம்போட
பாயும் தேனை விருந்தளித்தே
பறவை இனங்கள் பார்த்திடவே (அழகு