Wednesday 12 December 2012

எம் கே டி பாகவதர் பாடியது

ஆடும் அருவி
ராகம் -சாருகேசி
தாளம் - ஆதி




எடுப்பு

ஆடிவரும் அருவியிலே அமுத இசை கேட்குதம்மா!
அள்ளிப் பருகிடவே உள்ளம் துடிக்குதம்மா!

தொடுப்பு

பாடும் குயிலினமும் பச்சைப் பசுங்கிளியும்
பாய்ந்தோடும் மானினமும் நீர்வேட்கை கொள்ளுதம்மா-ஆடி

முடிப்பு

கொடிமுல்லை மாந்தளிரும்
குலுங்கும் சுவைக் கனியும்
குளித்துக் குளித்து அதில்
கொள்ளையின்பம் காணுதம்மா

பொடியாம் மகரந்தம்
பூவண்டு தூவிடவும்
பொன்னிறக் கதிரோனும்
புனலாடி நீந்துகிறான்
   (திருச்சி தியாகராஜன்)

Monday 10 December 2012

கவிஞரின் நிழற்படங்கள்

திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan)



திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan) 



திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan) 


Saturday 1 December 2012

போடா போடா பைத்தியமே

 படம் - உல்லாசப் பயணம்
பாடியவர்- டி எம் சௌந்தரராஜன்

click to hear

கவிஞரின் முதல் திரைப்பாடல்

படம் -பொன் விளையும் பூமி
பாடியவர் -சி எஸ் ஜெயராமன்

கவிஞர் திருச்சி தியாகராஜன் திரைத்துறையில் எழுதிய இந்த முதல் பாடலிலேயே, பொன் விளையும் பூமி படத்திற்கான விமர்சனத்தை எழுதிய தினத்தந்தி ,பாடலை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா? திருச்சி தியாகராஜனா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.அந்தளவுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்களோடு ஒப்பிட்டு எழுதியது குறிப்பிடத்தகுந்தது


பொன் விளையும் பூமியிலே
பொழுதெல்லாம் பாடுபட்டும்
புதுவாழ்வு காணாமல்
பொங்குகிறான் தொழிலாளி
அன்னைபூமி செல்வமெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாலும்
அரைவயிற்றுக் கஞ்சியில்லை
ஆடையில்லை வீடுமில்லை
தொகையறா
குடும்ப வண்டி குடுகுடுன்னு
உருண்டு ஓடுது- பாதை
குறுக்கே வந்து மேடு பள்ளம் 
தடுக்கப் பார்க்குது

கொடுமையான வேங்கைப்புலிகள்
காட்டை அழிக்குது- விலங்கு
குணம் படைத்த மனித மிருகம் 
நாட்டை அழிக்குது

சேற்றைக் கலக்கி நாத்தை நட்டவன்
காத்தா பறக்கிறான் - அதைப்
பாத்து ரசிக்கும் மோசக்காரன்
நோட்டா மடிக்கிறான் - பச்சை
நோட்டா மடிக்கிறான்

ஆடி ஆடி நம்ம ஜோடிமாடுகள்
ஜோரா போகுது-அதில்
ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும்
அழகு தோணுது

மூடிவச்சு மோசடி செய்யும்
பேடியைப் போலே- ஒருத்தன்
முன்னே விட்டு பின்னாலே வந்து
கடையாணியைக் கழட்டுறான்

முன்னே வச்ச கால நீயும்
பின்னே வைக்காதே - உன்
முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து
முகம் சுளிக்காதே

கண்ணு ரெண்டின் பார்வைபோலே
ஒண்ணா ஓடுங்க- வழியில்
காணும் ஏற்ற தாழ்வைக்
காலால் மிதிச்சிப் போடுங்க.


மகளுக்குப் பாடிய தாலாட்டு

1952 ஆம் ஆண்டு கவிஞர் திருச்சி தியாகராஜனுக்கு டிசம்பர் மாதம் க்றிஸ்துமஸ் நாளன்று  பெண்குழந்தை பிறக்கிறது.வான்மதி என்று பெயர் சூட்டுகிறார்.மகள் வான்மதிக்காக கீழ்கண்ட தாலாட்டுப்பாடலையும் எழுதுகிறார்.பின்னர் அவரது நூலிலும் இப்பாடல் இடம் பெற்றது.

தாலாட்டுப் பாடல்
எடுப்பு
வஞ்சகமில்லா மானிடப் பிஞ்சே
வான்மதியே இன்பத் தேன்துளியே

தொடுப்பு
மஞ்சம் உனக்கு என் நெஞ்சமடீ
மான்விழி மூடியே நீ உறங்காய்
அமைதி
ஆசையென்னும் கடலில் அள்ளிய வெண்முத்தே
அரும்பு மல்லிகையே! செங்கரும்பின் தீஞ்சுவையே!

பாசமென்னும் வலையால் என்னைப் பற்றி இழுத்துவிட்டாய்
பாவலர் கற்பனையின் ஓவியமே உறங்காய் நீ!

மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்

திரைப்படம்: செங்கமலத் தீவு (1962)

பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜமுனா ராணி

இயற்றியவர்: திருச்சி தியாகராஜன்

இசை: கே.வி. மஹாதேவன்



ஆண்:

மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்:

மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

ஆண்: கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா?
      காதலும் சதியால் பிரிந்து வாடுமா?
      கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா?
      காதலும் சதியால் பிரிந்து வாடுமா?
      இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா?
     எவருக்கும் என் மனம் இடம் தருமா?
     இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா?
     எவருக்கும் என் மனம் இடம் தருமா?

 ஆண்:மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
      மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்:மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
       உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

பெண்: பருவத்தில் சிரிப்பைக் குறைத்திருந்தேன்
       சிரித்திடும் உரிமைக்குக் காத்திருந்தேன்
       பருவத்தில் சிரிப்பைக் குறைத்திருந்தேன்
       சிரித்திடும் உரிமைக்குக் காத்திருந்தேன்
       இருவரின் கனவும் பலித்திடுமா?
       பெருமையை சிறுமை ஜெயித்திடுமா?
       இருவரின் கனவும் பலித்திடுமா?
       பெருமையை சிறுமை ஜெயித்திடுமா?

 ஆண்: மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
       மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்: மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
       உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

ஆண்: மரத்துக்குப் பூங்கொடி மாலையிடும்
       பொருத்தமாய்த் திருமண நாளும் வரும்

பெண்: கரையான் நெருப்பை அரித்திடுமா நம்
       கருத்தை வஞ்சகம் அழித்திடுமா?

ஆண்:மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
     மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்:மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
      உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?