Wednesday 12 December 2012

எம் கே டி பாகவதர் பாடியது

ஆடும் அருவி
ராகம் -சாருகேசி
தாளம் - ஆதி




எடுப்பு

ஆடிவரும் அருவியிலே அமுத இசை கேட்குதம்மா!
அள்ளிப் பருகிடவே உள்ளம் துடிக்குதம்மா!

தொடுப்பு

பாடும் குயிலினமும் பச்சைப் பசுங்கிளியும்
பாய்ந்தோடும் மானினமும் நீர்வேட்கை கொள்ளுதம்மா-ஆடி

முடிப்பு

கொடிமுல்லை மாந்தளிரும்
குலுங்கும் சுவைக் கனியும்
குளித்துக் குளித்து அதில்
கொள்ளையின்பம் காணுதம்மா

பொடியாம் மகரந்தம்
பூவண்டு தூவிடவும்
பொன்னிறக் கதிரோனும்
புனலாடி நீந்துகிறான்
   (திருச்சி தியாகராஜன்)

Monday 10 December 2012

கவிஞரின் நிழற்படங்கள்

திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan)



திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan) 



திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan) 


Saturday 1 December 2012

போடா போடா பைத்தியமே

 படம் - உல்லாசப் பயணம்
பாடியவர்- டி எம் சௌந்தரராஜன்

click to hear

கவிஞரின் முதல் திரைப்பாடல்

படம் -பொன் விளையும் பூமி
பாடியவர் -சி எஸ் ஜெயராமன்

கவிஞர் திருச்சி தியாகராஜன் திரைத்துறையில் எழுதிய இந்த முதல் பாடலிலேயே, பொன் விளையும் பூமி படத்திற்கான விமர்சனத்தை எழுதிய தினத்தந்தி ,பாடலை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா? திருச்சி தியாகராஜனா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.அந்தளவுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்களோடு ஒப்பிட்டு எழுதியது குறிப்பிடத்தகுந்தது


பொன் விளையும் பூமியிலே
பொழுதெல்லாம் பாடுபட்டும்
புதுவாழ்வு காணாமல்
பொங்குகிறான் தொழிலாளி
அன்னைபூமி செல்வமெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாலும்
அரைவயிற்றுக் கஞ்சியில்லை
ஆடையில்லை வீடுமில்லை
தொகையறா
குடும்ப வண்டி குடுகுடுன்னு
உருண்டு ஓடுது- பாதை
குறுக்கே வந்து மேடு பள்ளம் 
தடுக்கப் பார்க்குது

கொடுமையான வேங்கைப்புலிகள்
காட்டை அழிக்குது- விலங்கு
குணம் படைத்த மனித மிருகம் 
நாட்டை அழிக்குது

சேற்றைக் கலக்கி நாத்தை நட்டவன்
காத்தா பறக்கிறான் - அதைப்
பாத்து ரசிக்கும் மோசக்காரன்
நோட்டா மடிக்கிறான் - பச்சை
நோட்டா மடிக்கிறான்

ஆடி ஆடி நம்ம ஜோடிமாடுகள்
ஜோரா போகுது-அதில்
ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும்
அழகு தோணுது

மூடிவச்சு மோசடி செய்யும்
பேடியைப் போலே- ஒருத்தன்
முன்னே விட்டு பின்னாலே வந்து
கடையாணியைக் கழட்டுறான்

முன்னே வச்ச கால நீயும்
பின்னே வைக்காதே - உன்
முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து
முகம் சுளிக்காதே

கண்ணு ரெண்டின் பார்வைபோலே
ஒண்ணா ஓடுங்க- வழியில்
காணும் ஏற்ற தாழ்வைக்
காலால் மிதிச்சிப் போடுங்க.


மகளுக்குப் பாடிய தாலாட்டு

1952 ஆம் ஆண்டு கவிஞர் திருச்சி தியாகராஜனுக்கு டிசம்பர் மாதம் க்றிஸ்துமஸ் நாளன்று  பெண்குழந்தை பிறக்கிறது.வான்மதி என்று பெயர் சூட்டுகிறார்.மகள் வான்மதிக்காக கீழ்கண்ட தாலாட்டுப்பாடலையும் எழுதுகிறார்.பின்னர் அவரது நூலிலும் இப்பாடல் இடம் பெற்றது.

தாலாட்டுப் பாடல்
எடுப்பு
வஞ்சகமில்லா மானிடப் பிஞ்சே
வான்மதியே இன்பத் தேன்துளியே

தொடுப்பு
மஞ்சம் உனக்கு என் நெஞ்சமடீ
மான்விழி மூடியே நீ உறங்காய்
அமைதி
ஆசையென்னும் கடலில் அள்ளிய வெண்முத்தே
அரும்பு மல்லிகையே! செங்கரும்பின் தீஞ்சுவையே!

பாசமென்னும் வலையால் என்னைப் பற்றி இழுத்துவிட்டாய்
பாவலர் கற்பனையின் ஓவியமே உறங்காய் நீ!

மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்

திரைப்படம்: செங்கமலத் தீவு (1962)

பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜமுனா ராணி

இயற்றியவர்: திருச்சி தியாகராஜன்

இசை: கே.வி. மஹாதேவன்



ஆண்:

மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்:

மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

ஆண்: கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா?
      காதலும் சதியால் பிரிந்து வாடுமா?
      கரும்பை ஒடித்தால் கசந்து போகுமா?
      காதலும் சதியால் பிரிந்து வாடுமா?
      இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா?
     எவருக்கும் என் மனம் இடம் தருமா?
     இரும்பும் காந்தமும் விலகி ஓடுமா?
     எவருக்கும் என் மனம் இடம் தருமா?

 ஆண்:மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
      மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்:மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
       உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

பெண்: பருவத்தில் சிரிப்பைக் குறைத்திருந்தேன்
       சிரித்திடும் உரிமைக்குக் காத்திருந்தேன்
       பருவத்தில் சிரிப்பைக் குறைத்திருந்தேன்
       சிரித்திடும் உரிமைக்குக் காத்திருந்தேன்
       இருவரின் கனவும் பலித்திடுமா?
       பெருமையை சிறுமை ஜெயித்திடுமா?
       இருவரின் கனவும் பலித்திடுமா?
       பெருமையை சிறுமை ஜெயித்திடுமா?

 ஆண்: மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
       மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்: மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
       உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

ஆண்: மரத்துக்குப் பூங்கொடி மாலையிடும்
       பொருத்தமாய்த் திருமண நாளும் வரும்

பெண்: கரையான் நெருப்பை அரித்திடுமா நம்
       கருத்தை வஞ்சகம் அழித்திடுமா?

ஆண்:மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
     மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?

பெண்:மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்
      உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?




Monday 26 November 2012

சின்ன சின்ன பாப்பா

பாடல்: சின்ன சின்ன பாப்பா
திரைப் படம்: மாணவன்
பாடியவர்: பீ.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: சங்கர் கணேஷ்
நடிகை: லக்ஷ்மி

சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

தந்தையும் தாயும் தெய்வம் ஆகும்
தன்னலம் வந்தால் அன்பே மாறும்

குழுவினர்: தந்தையும் தாயும் தெய்வம் ஆகும்
தன்னலம் வந்தால் அன்பே மாறும்

சுசீலா: ஆமா..
சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

காலையிலே சேவலைப் போல் எழுந்திட வேண்டும்
காக்கை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும்
காலையிலே சேவலைப் போல் எழுந்திட வேண்டும்
காக்கை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும்
வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும்
வெட்டுக்கிளி போலே துள்ளி ஆடவும் வேண்டும்
ஆடவும் வேண்டும்..புரிஞ்சுதா?

சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

ஆந்தையாக பகலெல்லாம் தூங்கக் கூடாது
ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது
ஆந்தையாக பகலெல்லாம் தூங்கக் கூடாது
ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது
நண்டு போல பிடிவாதம் பிடிக்கக் கூடாது
நண்டு போல பிடிவாதம் பிடிக்கக் கூடாது
தொண்டு செய்யும் எண்ணத்தை மறக்கவும் கூடாது
மறக்கவும் கூடாது..புரிஞ்சுதா?

சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா
 
click here to listen 
  

வந்தால் இந்த நேரம் வா வா வா

படம் - செல்வியின் செல்வன்(1968)
பாடியவர் பி.சுசீலா
இசை டி கே புகழேந்தி

http://www.inbaminge.com/t/s/Selviyn%20Selvan/Vanthal%20Indha%20Neram.vid.html

Monday 19 November 2012

சித்திரை பெண்ணே

படம்- உல்லாச பயணம்
இசை கே வி மகாதேவன்
பாடியவர் எஸ் ஜானகி
http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=5274&PCat=1193




ஆண்டுக்கு மாதங்கள் பன்னிரண்டு
ஆண் பெண் வாழ்வின் கண்ணிரண்டு

சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே
சிங்காரக் கண்ணே சிங்காரக் கண்ணே
உன் திருமணத்தின் வாழ்த்துக்களை
தெரிஞ்சுக்க முன்னே

வித்தையும் கல்வியும் கத்துக்கிட்டா
வெற்றியைத் தந்திடும்
வீண்செலவுக்கு வை காசியின்னா
நஷ்டம் வந்திடும் ஆ..ஆ..ஆ..

ஆ! நீ ஒரு குணவதின்னு
மாமி மதிக்கணும்
ஆடி வரும் மயிலாய் உனை
கணவன் ரசிக்கணும்
ஆ வனிதையை மாயை எனும் பேச்சை மறுக்கணும்
அத்தனையும் புரட்டாசியின்னு வெறுக்கணும்

நாட்டை பசி வாட்டும்போது கார்த் திகைத்தாலும்
வீட்டிலே சேய் பசியைத் தாய்மார் கழிப்பாரோ
பாட்டில் கருத்தை மாசில்லாமல் காட்டும் வள்ளுவன்
பாங்கினிலே பங்குனியாய் வாழ்ந்திடுவாயே
 

வனத்தில் ஆயிரம் பூ மலரும்

படம்-உல்லாச பயணம்
இசை கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்-திருச்சி தியாகராஜன்
பாடியவர் எஸ் ஜானகி

http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=5275&PCat=1193



பேசாமல் நடந்து போறவரே
இந்த பெண்ணைக் கொஞ்சம் பாருங்க
பாசமுடன் கலந்த கோபத்தை
பாரமாய் எண்ணாமல் வாருங்க !
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
அது வாடி மண்ணில் உதிர்ந்து விடும்
மனதில் ஒரு பூ தான் மலரும்
அது வாடாதகாதல் ராகும்
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
நெஞ்சத்தில் ஊஞ்சல் ட்டி வைத்தேன்
அந்தஞ்சத்தில் உங்களை ஏற்றி வைத்தேன்
நெஞ்சத்தில் ஊஞ்சல் ட்டி வைத்தேன்
அந்தஞ்சத்தில் உங்களை ஏற்றி வைத்தேன்
கொஞ்சிடும் நேரம் வரும்போது
கொஞ்சிடும் நேரம் வரும்போது
சஞ்சல புயலும் வரலாமா..ஆஆ ஹாஆஆ..
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
இருவருக்கும் இன்று தனி வீடு
திருமணமானால் ஒரு வீடு
இருவருக்கும் இன்று தனி வீடு
திருமணமானால் ஒரு வீடு
வெறுப்பும் சிரிப்பாய் மாறாதா
வெறுப்பும் சிரிப்பாய் மாறாதா
சிரிப்பில் அழகும் ஆடாதா ஆஆ ஹாஆஆ
வனத்தில் ஆயிரம் பூ மலரும்
அது வாடி மண்ணில் உதிர்ந்து விடும்
மனதில் ஒரு பூ தான் மலரும்
அது வாடாதகாதல் ராகும் !
 


கல்யாண சாப்பாடு போடுமுன்னே



படம்: துளசி மாடம் (1963)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி

கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே...
 
உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...
உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
 
வாசலில் கட்டிய தோரணம் போல்...
வரிசையாய் காய்கற் வைக்கட்டுமா..
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க 
பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
 
ஊற்றிய வியர்வையை துடைக்கட்டுமா..
நெருங்கி நெருங்கி உணரட்டுமா..
பட்டுப் புடவை முந்தாணையால் 
பக்கத்தில் இருந்தே வீசட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
 
வெட்கப் படாம சாப்பிடுங்க..
ஏதும் வேனுமின்னா என்னை கேட்டிடுங்க..
பக்கத்தில்தானே காத்திருக்கேன்..
நான் பத்திரமாக பாத்துக்குவேன்..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே 
என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
 
http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Thulasi%20Maadam 
 

பூட்டிய மனதைத் திறந்துவிடு

படம்-உல்லாச பயணம்
இசை.கே.வி.மகாதேவன்

என்னைப் பார்த்தா பரிகாசம்?


Movie: Sengamala theevu - திரைப்படம்: செங்கமலத் தீவு
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ் 
Lyrics: Thiruchy Thiagarajan - இயற்றியவர்: திருச்சி தியாகராஜன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1962

என்னைப் பார்த்தா பரிகாசம்? எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்? எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்?

திருமணம் முடிந்து விட்டால் குடும்ப தண்டனை
பொருளைத் தேட நினைக்கும் போது அலையும் தண்டனை
வரவும் செலவும் மீறினாலே வாழ்க்கை தண்டனை
வையகத்தில் பொய்யும் மெய்யும் மோதும் தண்டனை
என்னைப் பார்த்தா பரிகாசம்? எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்?

நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதியில்லை
கள்ளானாக மாறினாலும் கண்டது தொல்லை
அல்லும் பகலும் பாடுபட்டும் ஆறுதல் இல்லை
சொல்லப் போனால் துன்பம் தானே மனிதனின் எல்லை
என்னைப் பார்த்தா பரிகாசம்? எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்?

http://shakthi.fm/ta/album/show/8d996f69/s86b04e14

வட்ட வட்டப் பாத்தி கட்டி




பாடல்: வட்ட வட்டப் பாத்தி கட்டி

திரைப் படம்: தாழம் பூ

பாடியவர்: பி.சுசீலா மற்றும் குழுவினர்

இசை: கே.வி.மஹாதேவன்

நடிப்பு: கே.ஆர்.விஜயா

 


சுசீலா: வட்ட வட்டப் பாத்தி கட்டி

வண்ண வண்ண சேலை கட்டி

கட்டழகி நடப்பது நாட்டியமா

அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா



வட்ட வட்டப் பாத்தி கட்டி

வண்ண வண்ண சேலை கட்டி

குழுவினர்: கட்டழகி நடப்பது நாட்டியமா

அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா



சுசீலா: பந்தோடு பந்தடித்துக் குலுங்க

பாவை அவள் கண்ணடித்து மயங்க

பந்தோடு பந்தடித்துக் குலுங்க

பாவை அவள் கண்ணடித்து மயங்க

குழுவினர்: மயங்க..

சுசீலா: முந்தி முந்தி ஓடுறாள் ராதை ..ராதை

அவள் முந்தானை பட்டாலே போதை

குழுவினர்: அவள் முந்தானை பட்டாலே போதை



சுசீலா: வட்ட வட்டப் பாத்தி கட்டி

வண்ண வண்ண சேலை கட்டி

குழுவினர்: கட்டழகி நடப்பது நாட்டியமா

அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா



சுசீலா: ஒய்யாரப் பெண்ணே ஓடி வா ஓடி வா ஓடி வா

உல்லாச மயிலே ஆடி வா ஆடி வா ஆடி வா

சுசீலா: ஒய்யாரப் பெண்ணே

குழுவினர்: ஓடி வா ஓடி வா ஓடி வா

சுசீலா: உல்லாச மயிலே

குழுவினர்: ஆடி வா ஆடி வா ஆடி வா

சுசீலா: மை தீட்டி விழியைச் சிமிட்டி வா

மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா

மை தீட்டி விழியைச் சிமிட்டி வா

மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா



குழுவினர்: வட்ட வட்டப் பாத்தி கட்டி

வண்ண வண்ண சேலை கட்டி

சுசீலா: கட்டழகி நடப்பது நாட்டியமா

அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா



சுசீலா: செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ

செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ

செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ

செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ

பம்பரமா சுத்துறா மீனா .. ஆ.. மீனா...

ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா

குழுவினர்: ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா



சுசீலா: வட்ட வட்டப் பாத்தி கட்டி

வண்ண வண்ண சேலை கட்டி

கட்டழகி நடப்பது நாட்டியமா

அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா



குழுவினர்: வட்ட வட்டப் பாத்தி கட்டி

சுசீலா: ஓஹோ ஒஹோ ஓஓ..

குழுவினர்: வண்ண வண்ண சேலை கட்டி

சுசீலா: அஹ அஹ ஆ ஹா....

கட்டழகி நடப்பது நாட்டியமா

அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா

வரிசையா மாப்பிள்ளை வருவாரு சீர்வரிசையை பாத்தா சிரிப்பாரு

பாடல்: வரிசையா மாப்பிள்ளை வருவாரு
திரைப் படம்: விளக்கேற்றியவள்
பாடியவர்: பீ.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: டி.ஆர்.பாப்பா

வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

படித்த மனைவி என்று தேடி வருவார்
பார்வைக்கு அழகென்று ஓடி வருவார்
படித்த மனைவி என்று தேடி வருவார்
பார்வைக்கு அழகென்று ஓடி வருவார்
அடுப்பங்கரைக்கு சிலர் ஆளைத் தேடுவார்
அடிமையாய் நடத்தவும் மாலை போடுவார்

வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

ஆட்டம் பாட்டம் கண்டு ரசிப்பார்
அப்படியே மனைவியை எதிர் பார்ப்பார்
ஆட்டம் பாட்டம் கண்டு ரசிப்பார்
குழுவினர்: அப்படியே மனைவியை எதிர் பார்ப்பார்
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
குழுவினர்: பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்

சுசீலா,குழுவினர்: வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

சுசீலா,குழுவினர்: பச்சை மரத்திலே பழுத்த இலை போல
பாதியில் உதறித் தள்ளாமல்
பச்சை மரத்திலே பழுத்த இலை போல
பாதியில் உதறித் தள்ளாமல்
பத்திரமாய் பெண்னை பாதுகாக்கும்
ஆண்கள் பாசம் நமக்கு தேவையடி..தேவையடி

சுசீலா,குழுவினர்: வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு


click to hear 

சிந்தித்தால் சிரிப்பு வரும்

திரைப்படம்: செங்கமலத் தீவு
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Thiruchy Thiagarajan - இயற்றியவர்: திருச்சி தியாகராஜன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1962 

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா மென்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

பார்த்த கண்கள் நான்கு...



திரைப் படம்; உல்லாச பயணம் (1964)
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்; TMS, S ஜானகி 
நடிப்பு; SSR, விஜயகுமாரி 
 
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு... 
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு... 
 
ஏன் ஏன் என்ற கேள்வியிலே 
இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...
ஏன் ஏன் என்ற கேள்வியிலே 
இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...
தேன் தேன் என்ற சுவையினிலே.. 
தேன் தேன் என்ற சுவையினிலே 
இனி சிரித்து பழகுவேன் இனிமையிலே...
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு... 
 
காற்று விளையாட சோலை உண்டு...
கனிகள் விளையாட மரங்கள் உண்டு...
காற்று விளையாட சோலை உண்டு...
கனிகள் விளையாட மரங்கள் உண்டு...
காட்டு விளையாட தாளம் நடை போட 
பருவ சுகம் காணும் நேரமுண்டு...
 
பார்த்த கண்கள் நான்கு...
 
வானத்தில் இரண்டு நிலவில்லை... 
தேனுக்கு இரண்டு சுவையில்லை
வானத்தில் இரண்டு நிலவில்லை... 
தேனுக்கு இரண்டு சுவையில்லை
நானும் நீயும் ஒன்றானால் 
நானும் நீயும் ஒன்றனால்...
நடுவிலே யாருக்கும் பங்கில்லை...
 
பார்த்த கண்கள் நான்கு... 
பழகும் நெஞ்சம் ரெண்டு...
வார்த்தை அங்கு ஒன்று... 
வாரிக் கொடுப்பது அன்பு...
பார்த்த கண்கள் நான்கு...

Sunday 18 November 2012

தாமரை பூத்த தடாகமடி

 தண்டபாணி தேசிகரின் குரலில்

தாமரை பூத்த தடாகமி - செந் 
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதி - ஞானத் ( தாமரை)  


பாமழை யால்வற்றாப் பொய்கையி - தமிழ்ப் 
பைங்கிளி கள்சுற்றிப் பாடுதி - ஞானத் 
தாமரை பூத்ததடாகமடி -செந் 
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி (தாமரைப்)  

காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங் 
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே 
ஆவிம கிழும்தமிழ்த் தென்றலதே - இசை 
அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞானத்  (தாமரை) 


தாமரை பூத்த தடாகமடி -செந்
தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி- ஞானத்
தாமரை பூத்த தடாகமடி....