Monday 19 November 2012

வரிசையா மாப்பிள்ளை வருவாரு சீர்வரிசையை பாத்தா சிரிப்பாரு

பாடல்: வரிசையா மாப்பிள்ளை வருவாரு
திரைப் படம்: விளக்கேற்றியவள்
பாடியவர்: பீ.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: டி.ஆர்.பாப்பா

வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

படித்த மனைவி என்று தேடி வருவார்
பார்வைக்கு அழகென்று ஓடி வருவார்
படித்த மனைவி என்று தேடி வருவார்
பார்வைக்கு அழகென்று ஓடி வருவார்
அடுப்பங்கரைக்கு சிலர் ஆளைத் தேடுவார்
அடிமையாய் நடத்தவும் மாலை போடுவார்

வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

ஆட்டம் பாட்டம் கண்டு ரசிப்பார்
அப்படியே மனைவியை எதிர் பார்ப்பார்
ஆட்டம் பாட்டம் கண்டு ரசிப்பார்
குழுவினர்: அப்படியே மனைவியை எதிர் பார்ப்பார்
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
குழுவினர்: பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்

சுசீலா,குழுவினர்: வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு

சுசீலா,குழுவினர்: பச்சை மரத்திலே பழுத்த இலை போல
பாதியில் உதறித் தள்ளாமல்
பச்சை மரத்திலே பழுத்த இலை போல
பாதியில் உதறித் தள்ளாமல்
பத்திரமாய் பெண்னை பாதுகாக்கும்
ஆண்கள் பாசம் நமக்கு தேவையடி..தேவையடி

சுசீலா,குழுவினர்: வரிசையா மாப்பிள்ளை வருவாரு
சீர் வரிசையைப் பார்த்தா சிரிப்பாரு
சீர் வரிசையைப் பார்த்தா தான் சிரிப்பாரு


click to hear 

No comments:

Post a Comment