Monday 26 November 2012

சின்ன சின்ன பாப்பா

பாடல்: சின்ன சின்ன பாப்பா
திரைப் படம்: மாணவன்
பாடியவர்: பீ.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: சங்கர் கணேஷ்
நடிகை: லக்ஷ்மி

சின்ன சின்ன பாப்பா வாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

தந்தையும் தாயும் தெய்வம் ஆகும்
தன்னலம் வந்தால் அன்பே மாறும்

குழுவினர்: தந்தையும் தாயும் தெய்வம் ஆகும்
தன்னலம் வந்தால் அன்பே மாறும்

சுசீலா: ஆமா..
சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

காலையிலே சேவலைப் போல் எழுந்திட வேண்டும்
காக்கை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும்
காலையிலே சேவலைப் போல் எழுந்திட வேண்டும்
காக்கை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும்
வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும்
வெட்டுக்கிளி போலே துள்ளி ஆடவும் வேண்டும்
ஆடவும் வேண்டும்..புரிஞ்சுதா?

சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா

ஆந்தையாக பகலெல்லாம் தூங்கக் கூடாது
ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது
ஆந்தையாக பகலெல்லாம் தூங்கக் கூடாது
ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது
நண்டு போல பிடிவாதம் பிடிக்கக் கூடாது
நண்டு போல பிடிவாதம் பிடிக்கக் கூடாது
தொண்டு செய்யும் எண்ணத்தை மறக்கவும் கூடாது
மறக்கவும் கூடாது..புரிஞ்சுதா?

சின்ன சின்ன பாப்பா
சேதியைக் கேளப்பா
சொன்ன படி நடந்தா நாட்டின் கண்ணே நீ தாம்பா
 
click here to listen 
  
No comments:

Post a Comment